அமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தில் செய்திவெளியிட்டதால் ஹெக்நேலியகொட தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர் கடும் கோபம் கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள தடையேற்படும் என்பதால் குறித்த அமைச்சரின் பெயரை வெளியிட முடியாது எனவும் இது பற்றி ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவன் ஊடாக ஜனாதிபதிக்கு அறிவிக்க எண்ணியுள்ளதாகவும் பரதீக் ஹெக்நேலியகொடவின் நண்பர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அமைச்சரின் செய்தியை வெளியிட்டதால் லங்கா ஈநியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் சந்தரூவான் சேனாதீர மரண அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவரை கடத்திச் செல்ல இனந்தெரியாத சிலர் கடந்த வாரம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கடந்த மாதம் 24ம் திகதி கடத்திச் செல்லப்பட்ட ஹெக்நேலியகொடவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கோரி அவரது மனைவி சந்தியா ஹெக்நேலியகொட கடந்த வாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடதக்கது.