Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஊடகவியலாளர்கள் படுகொலை : இலங்கைக்கு நான்காவது இடம்

ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தவர்களை சுதந்திரமாக நடமாட விட்டுள்ள உலக நாடுகளிடையே நான்காவது இடம் இலங்கைக்குக் கிடைத்துள்ளது. ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு ( Committee to Protect Journalists – CPJ) வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் இது தெரிய வந்துள்ளது. 2001 ஆம் ஆண்டு முதல் 2011 வரை ஊடகவியலாளர்கள் படுகொலைகளை கண்டுகொள்ளாமல் விட்ட 13 நாடுகள் பற்றி அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக் கால எல்லைக்குள் இலங்கையில் 9 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்த அறிக்கைக்கு அமைய ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தவர்களை சுதந்திரமாக நடமாட விட்டுள்ள உலக நாடுகளிடையே முதலாவது இடத்தை ஈராக்கும், இரண்டாவது இடத்தை சோமாலியாவும், மூன்றாவது இடத்தை பிலிப்பைன்ஸும் பெற்றிருக்கின்றன. உலகம் முழுவதிலும் ஊடகவியலாளர்கள் படுகொலைகளில் 70% ஆனது, அவர்கள் சேவையிலுள்ள போதே நிகழ்ந்திருப்பதாகவும், அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. அதே போல 1992ம் ஆண்டு முதல் ஊடகவியலாளர்கள் 547 பேரைப் படுகொலை செய்தவர்கள் சுதந்திரமாக நடமாடுவதாகவும், கடந்த வருடம் இப் பட்டியலில் இருந்த அனேக நாடுகள் இம் முறையும் அதே இடத்தில் இருப்பதானது கவலைக்குரிய விடயமெனவும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. Rank Nation Unsolved Cases Population Calculation Rating (in millions) 1 Iraq 92 31.5 92/31.5 2.921 2 Somalia 10 9.1 10/9.1 1.099 3 Philippines 56 92 56/92 0.609 4 Sri Lanka 9 20.3 9/20.3 0.443 5 Colombia 11 45.7 11/45.7 0.241 6 Afghanistan 7 29.8 7/29.8 0.235 7 Nepal 6 29.3 6/29.3 0.205 8 Mexico 13 107.4 13/107.4 0.121 9 Russia 16 141.8 16/141.8 0.113 10 Pakistan 14 169.7 14/169.7 0.082 11 Bangladesh 5 162.2 5/162.2 0.031 12 Brazil 5 193.7 5/193.7 0.026 13 India 7 1,155.3 7/1,155.3 0.006

Exit mobile version