Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஊடகவியலாளர்கள் கூட எமது பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதில்லை!

யாழ்நகர் நிருபர் : திருகோணமலை வெருகல் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மக்கள் அண்மையில் கிழக்கில் பெய்த பெருமழை காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மக்களுக்கு வழங்குவதற்கென யாழ்.மாவட்ட மக்களும் புலம்பெயர் உறவுகளும் வழங்கிய உதவிப் பொருட்களை அந்த மக்களின் கரங்களில் நேரடியாகக் கையளித்த பின்னர் யாழ்.திரும்பியுள்ள மாணவர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

கிழக்கில் ஏற்பட்ட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென யாழ்.மாவட்ட மக்களிடம் சேகரிக்கப்பட்ட பொருட்களுடன் முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்குச் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் அந்த மக்களுக்கு உதவிகளை வழங்கியிருந்தனர்.

இரண்டாம் கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்டத்திற்குச் சென்ற மாணவர்கள் அங்குள்ள வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்கினர். இப்பிரதேச செயலர் பிரிவில் வெருகல் கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த மாவடிச்சேனை, சேனையூர், வட்டுவன் ஆகிய கிராமங்களில் 483 குடும்பங்களுக்கு கறுக்காமுனை கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த கறுக்காமுனை, விநாயகபுரம், தில்லங்குழி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 286 குடும்பங்களுக்கும் பூமரத்தடிச்சேனை கிராம சேவையாளர் பிரிவில் 245 குடும்பங்களுக்கும் உலருணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர்.

ஏற்கனவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்கள் அண்மையில் ஏற்பட்ட மழையினாலும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மக்களின் குறைகள் இதுவரை வெளியே எடுத்துச் செல்லப்படவில்லையென்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.

எந்தவொரு அரச அதிகாரிகளும் வந்து எமது குறைநிறைகளைப் பார்வையிடுவதில்லை. தொண்டு நிறுவனங்களும் இங்கே வருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஊடகவியலாளர்கள் கூட எமது பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதில்லை. ஏனெனில் அவர்கள் எமது பிரதேசத்திற்கு வருவதற்கு அனுமதிக்கப்படவில்லையென்றே தாங்கள் கருதுவதாக அந்த மக்கள் கூறியதாகப் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.

எங்களுக்கு இரண்டு,மூன்று நாட்களுக்கான உணவுத் தேவைகளை நீங்கள் பூர்த்திசெய்திருக்கிறீர்கள். இனிமேல் நாம் யாரிடம் கை ஏந்துவது? யார் எமக்கு உதவுவார்கள்? என்ற ஏக்கத்துடன் இந்த மக்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள் என்றும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்த மக்களிடம் சென்று அவர்களின் குறைகளை நிவர்த்திசெய்வது அரச அதிகாரிகளினதும் தொண்டு நிறுவனங்களினதும் கடமையென்று சுட்டிக்காட்டியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் பிரதேசத்திலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான

Exit mobile version