தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ‘லங்கா ஈ நியூஸ்’ இணையத்தள ஊடகவியலாளர் ஷாந்த விஜேசூரிய, மஹர சிறைச்சாலைக்குள் வைத்து காவல்துறை அதிகாரியொருவரால் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிய வந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மூன்றாம் திகதி நிகழ்த்தப்பட்ட இத் தாக்குதல் குறித்து பாரபட்சமற்ற விசாரணையொன்று நடத்தப்படுமென சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் அஷோக ஹபுஆரச்சி தெரிவித்துள்ளார்