Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உள்ளூராட்சித் தேர்தல் – மனோ கணேசன் வேண்டுகோள்

அனைத்து வழிகளிலும் உள்ளூராட்சித் தேர்தல்களில் ஆட்சியைக் கையகப்படுத்த மகிந்த அரசு முனையும் நிலையில் நாளை (08.10.2011) மூன்றாம் கட்ட உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறுகின்றன.
17 மாநகரசபைகள், ஒரு நகர சபை, மற்றும் 5 பிரதேச சபைகள் என மொத்தமாக 23 உள்ளூராட்சி சபைகளுக்கு 420 பேரை தெரிவு செய்வதற்கு 26 அரசியல் கட்சிகள் மற்றும் 104 சுயேட்சைக் குழுக்கள் சார்பில் 6448 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதற்காக 1,167 வாக்களிப்பு நிலையங்களில் 15 லட்சத்து 89 ஆயிரத்து 622 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
முன்னதாக, மார்ச் மற்றும் ஜூலை மாதங்களில் கட்டம் கட்டமாக நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் இப்போது நடத்தப்படும் மூன்றாவது கட்டத்தில் தான் பெரிதும் எதிர்பார்க்கப்படும் கொழும்பு மாநகரசபை தேர்தலும் நாளை நடைபெறுகின்றது.
கொழும்பில் ஆளும் பிரதான சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட தலைமையிலான அணியும் பிரதான எதிரணியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஏஜேஎம் முஸம்மில் தலைமையிலான அணியும் போட்டியிடும் இந்த தேர்தலில் தமிழ் கட்சியான மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி இன்னொரு அணியாக போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கட்டம் கட்டமாக நடத்தப்படும் தேர்தல்களில் அரசு தனது முழுப்பலத்தையும் பிரயோகித்து தேர்தல் பிரசாரங்களிலும் ஏனைய அரசியல் பணிகளிலும் ஈடுபட்டுவருகிறது என ஆரம்பத்திலிருந்தே குற்றஞ்சாட்டப்பட்டுவந்தத
4. ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே தலைமையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தீவிரமாக பங்கெடுத்தது என்றும், தேசம் மற்றும் மக்களின் நலனை கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நாக்பூரில் நேற்று நடந்த விஜயதசமி விழா கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுகையில் கூறியிருக்கிறார்.
இந்து மதவெறி அமைப்பான ஆர்.எஸ்.ஏஸ் என்ற பயங்கரவாத அமைப்பினது கூற்றை அன்னா ஹசரே முழுமையாக நிராகரிக்காமல் மறுத்திருக்கிறார்.
ஊழல் ஒழிப்பில் ஈடுபடுவதாக உலகில் போராட்டங்களையும் எழுச்சிகளையும் தடுத்துவரும் பன்னாட்டுக் கம்பனிகளின் வளர்ப்பான ட்ரான்ஸ் பெரன்ஸி இன்ரடர் நாஷனல் என்ற தன்னார்வ அமைப்பு அன்னா ஹசரேவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
5. இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் நிரந்தரமான தொடர்பைப் பேணி வருபவரும், இலங்கை அரசை வன்னிப்படுகொலைக் காலத்திலிருந்து ஆதரித்து வருபவடுமான பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் சியாம் பொக்ஸ் சிக்கலில் மாட்டியுள்ளார். அவர்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கை அரசுடனான நல்லிணக்கச் செயற்பாடுகளுக்காக அவர் குற்றம் சுமத்தப்படவில்லை.
அடம் வெரிட்டி என்ற அவரின் நண்பருடனான தொடர்புகள் குறித்தே குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
தனது நண்பருடன் அவர் இலங்கை சென்று பல நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் முன்னை நாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிகாமரின் மனைவி ஏற்பாடு செய்த கருத்தரங்கத்தில் ஸ்யாம் பொக்ஸ் வெரிட்டியுடன் கலந்து கொண்டமைக்கான ஆதரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
34வயதாகும் வெரிட்டியை ஸியாம் பொக்ஸ் பல 14 தடவைகள் பாதுகாப்புச் செயலகத்தில் சந்தித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
6. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக நாளாந்தம் மேற்கொள்ளப்படும் கருத்துக் கணிப்புக்கள் தினந்தோறும் மாலை வேளையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்கும், பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவிற்கும் அரச புலனாய்வுப் பிரிவினால் வழங்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் இன்று வழங்கப்பட்ட கருத்துக் கணிப்புக்களின்படி கொழும்பு மாநகர சபையில் எந்தவொரு கட்சியும் 50 வீத வாக்குகளைப் பெறாது என அரச புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை, கொழும்பு மாநகரசபை, தெகிவளை-கல்கிசை மாநகரசபை, கொலன்னாவை நகரசபை உள்ளடங்கிய தலைநகர பிரதேசத்திலே வாழ்கின்ற தமிழ் வாக்காளர்கள் தமது வாக்குரிமை ஆயுதத்தை பயன்படுத்துவதை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version