
234 உள்ளூராட்சி சபைகளுக்காக நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் வாக்களிப்பு தாழ்ந்த மட்டத்திலேயே காணப்பட்டதாக தெரிவித்திருக்கும் தேர்தல் செயலகம் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாத்திரம் சற்று முன்னேற்றத்தைக் காணக்கூடியதாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
3 மாநகர சபைகள்,30 நகரசபைகள், 201 பிரதேச சபைகளை உள்ளடக்கிய 234 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்ட போதிலும் சுமார் இரண்டு மணி நேரம்வர
வாக்களிப்பு நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டதாகவும் நண்பகலுக்குச் சற்று முன்னரே சிறிய அளவிலானோர் வாக்களிப்பில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தது. நண்பகல் 12 மணியாகும் போது 20 முதல் 25 சதவீதமானோரே வாக்களித்திருந்ததாகவும் மாலை 4மணிக்கு வாக்களிப்பு நிறைவடையும் போது 40 முதல் 45 வரையிலான சதவீதத்தினரே வாக்களித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.