Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உள்ளுராட்சி சபை : மகிந்த கூட்டணி பெரும் வெற்றி

நேற்று நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  வெற்றி பெற்றுள்ளது. 235 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஆளும் கட்சி 207 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளுராட்சி சபைகளும் அடங்கும். மன்னார் முசலி பிரதேச சபை, வவுனியா சிங்கள பிரதேச சபை, மட்டக்களப்பு ஏறாவூர் நகர சபை, காத்தான்குடி நகர சபை, கோரளை பற்று மேற்கு பிரதேசபை, அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் சிங்கள மக்கள் அதிகம் வசிக்கும் 7 உள்ளுராட்சி சபைகள் உட்பட 8 சபைகளை ஆளும் கட்சி கைப்பற்றியது.

திருகோனமலை மாவட்டத்தின் கிண்ணியா நகர சபை, மூதூர் பிரதேச சபை, கோமரங்கடவல பிரதேச சபை உட்பட 7 உள்ளுராட்சி சபைகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியது.

இலங்கை தமிழரசு கட்சி 12 உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது. இதில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை,மாந்தை மேற்கு பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, வவுனியா தமிழ் பிரதேச சபை, வெங்களசெட்டிக்குளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபை, , அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச சபை, ஆலையடிவேம்பு பிரதேச சபை, திருகோணமலை நகர சபை, வெருகல் பிரதேச சபை ஆகிய உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம், நிந்தவூர், அட்டாளைச்சேனை, பொத்துவில் ஆகிய உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது. அக்கரைப்பற்று பிரதேச சபை மற்றும் மாநகர சபையை அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அதேவேளை நுவரெலியா பிரதேச சபை மலையக மக்கள் முன்னணி கைப்பற்றியுள்ளது.

Exit mobile version