Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உள்துறை அமைச்சரே பயங்கரவாதத்திற்கு ஆதரவு

இந்து தீவிரவாத சர்ச்சை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே வருத்தம் தெரிவித்திருப்பதை shindeபாஜ மற்றும் சிவசேனா கட்சிகள் வரவேற்றுள்ளன. இந்த பிரச்னை இத்துடன் முடிவுக்கு வந்ததாக அறிவித்துள்ளன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, ‘பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் முகாம்களில் இந்து தீவிரவாதம் ஊக்குவிக்கப்படுகிறது’ என்றார். இதற்கு பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் கடும் கண்டனம் தெரிவித்தன. சுஷில் குமார் ஷிண்டே மன்னிப்பு கேட்காதவரை அவரை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் புறக்கணிக்கப்போவதாக அறிவித்தன.
ஷிண்டே வீட்டை நோக்கி நேற்று பாஜ தலைவர் ராஜ்நாத்சிங் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் ஊர்வலமாக சென்றனர்.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் ஷிண்டே தனது கருத்துக்காக புதன்கிழமை வருத்தம் தெரிவித்தார்.
இதற்கிடையில் இந்து பயங்கரவாதம் குறித்து தம்மிடம் ஆதாரம் இருப்பதாக ஷிண்டே முன்னதாகத் தெரிவித்திருந்தார். அந்த ஆதரங்கள் எங்கே? புதைக்கப்ப்பட்டுவிட்டனவா போன்ற கேள்விகள் மக்கள்மத்தியில் எழ ஷிண்டே பயங்கரவாதத்திற்கு ஆதரவா என்ற என்ற சந்தேகங்களும் எழுகின்றன.
அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:

எந்த மதத்துடனோ அல்லது அரசியல் கட்சிகளுடனோ பயங்கரவாதத்தைத் தொடர்புபடுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. ஜெய்ப்பூரில் கடந்த மாதம் நான் தெரிவித்த கருத்து, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட மதத்தோடு பயங்கரவாதத்தை நான் சம்பந்தப்படுத்தியது போலவும், பயங்கரவாத முகாம்களை நடத்தும் பணியில் சில அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளது போலவும் நான் கூறியதாக புரிந்து கொள்ளப்பட்டது.

எனது பேச்சில் பயங்கரவாதத்துடன் கட்சிகளைத் தொடர்புபடுத்துவதாகக் கூறப்படுவதற்கு அடிப்படையே இல்லை. எனினும், எனது பேச்சால் சர்ச்சை எழுந்து விட்டதால், இந்த விளக்கத்தை நான் வெளியிடுகிறேன். எனது கருத்தால் மனம் புண்பட்டவர்களுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் எனது பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version