Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உளவுத்துறைகளும் புலிசார் புலம்பெயர் அமைப்புக்களும்

இந்திய உளவுத்துறை நாடுகடந்தத தமிழீழ அரசாங்கத்தின் “பிரதமரான” ருத்ரகுமாரனுடன் இறுக்கமான தொடர்புகளைப் பேணுவதாகவும், அதனோடு கூட பிரித்தானியாவை மையமாகக் கொண்டியங்கும் உலகத் தமிழர் பேரவையுடனும் தொடர்புகளைப் பேணுவதாகவும் உபுல் ஜோசப் பெர்ணான்டோ என்பவர் டெய்லி மிரர் பத்திரிக்கைக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு புலிகளின் புலம்பெயர் நாடுகளின் தலைவர் நெடியவனின் நகர்வுகள் நோர்வே உளவுத்துறையின் ஊடாக நெருக்கமானக் கண்காணிக்கப்படுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

தவிர, பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் உலகத்தமிழர் பேரவை போன்ற பிரித்தானியாவை மையமாகக் கொண்ட அமைப்புக்கள் ராகுல் காந்தியைச் சந்தித்தாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை, இந்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உளவு நிறுவனங்களின் பிடியில் ஈழத் தமிழ்ப் பேசும் மக்களின் எதிர்காலம் விற்பனை செய்யபடுவதாக ஈழப் பிரச்சனை குறித்து அக்கறை கொண்டோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக இந்திய அரசாங்கம் திட்டமிட்டு நிகழ்த்திய இனப்படுகொலையின் பின்னரான புதிய வழிமுறைகளை பரிசீலிக்க மறுக்கும் இவ்வமைப்புக்கள் உளவுத்துறைகளிடம் தஞ்சமடைவது எதிர்காலத்தை மிகவும்  சிக்கலானதாக மாற்றும்.

Exit mobile version