கடந்த வருடம் இலங்கையின் பிரதான வருமானம் உல்லாசப் பயணத்துறையாக மாற்றுவதே தமது நோக்கம் என மகிந்த ராஜபக்ச கூறியது குறிப்பிடத்தக்கது. பிரித்தானியாவில் உள்ள ஈழத் தமிழ் ரியல் எஸ்டேட் வியாபரிகளான ரில்கோ யாழ்ப்பாணத்தில் பெருத்த செலவில் நட்சத்திர விடுதியும் உல்லச பூங்கவும் உருவாக்கி வருவதும், 400 ஏக்கர் நிலத்தில் மலேசிய ஈழத் தமிழ் வியாபாரி நட்சத்திர விடுதியை ஹப்புத்தல என்ற இடத்தில் உருவாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. இதே வேளை கொழும்பில் புலிகளின் முதலீடான உல்லசப் பயண விடுதியை புலம் பெயர் ‘தேசிய வாதிகள்’ கோதாபயவுடன் இணக்கத்திற்கு வந்து சுவீகரித்துக்கொண்டதும் நினைவு கூரத்தக்கது.
இதற்கு அப்பால் 2010 ஆண்டின் உலகின் முதலாவது உல்லாசப் பயண நாடாக நியோர்க் டைம்ஸ் கண்டுகொண்டதும் கோர்வையாகப் பார்க்கப்பட வேண்டியுள்ளது.
ஆசிய நாட்டவர்களுக்கான பிரதான சுற்றுலா மையமாக இலங்கையை மாற்றுவதற்கான பல்தேசிய நிறுவனங்களின் சதி ஆரம்பமாகிவிட்டது எனலாம். இந்த வேளையில் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் பாலியல் தொழிலை திட்டமிட்டு திணிப்பதையும் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளது.