பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான இத் திட்டத்தை சிறீ லங்கா ரெலிகொம் நிறுவனமே முகாமைத்துவம் செய்கிறது. சிறீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் நேரடிக் கண்காணிப்பிலும் நிர்வாகத்திலும் இயங்கும் இத் திட்டடம் இந்து சமுத்திரத்தை இராணுவ மயப்படுத்தும் ஏகாதிபத்திய நாடுகளின் திட்டத்தின் ஒரு பகுதியே.
மலேசியாவின் பல்தேசிய வியாபாரியான அனந்த கிருஷ்ணன் மற்றும் ராஜபக்ச குடும்பம் தலைமையேற்றுள்ள இத் திட்டம் இலங்கை அரச பாசிஸ்டுக்கள் மீது ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் கொண்டிருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
நிலைமை இவ்வாறிருக்க தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் புலம்பெயர் இணையங்களில் வெளியாகியுள்ள அறிக்கையில், ஏகாதிபத்திய நாடுகள் தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுத்தரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை இனகொலையாளிகளை மிரட்டி தமக்குத் தேவையானதைப் பெற்றுக்கொள்ளும் உலக நாடுகளின் அதிகார வர்க்கங்கள் கூடுகட்டியிருக்கும் இலங்கை ஒட்டுமொத்தமாகச் சூறையாடப்படுகின்றது.
ராஜபக்ச குடும்பமும் லைக்காவும் இணைந்து நடத்திய ஊழல் ஊடாக சிறீ லங்கா ரெலிகொமில் புகுந்குகொண்ட ராஜபக்ச குடும்பத்தின் தலைகள் இத் திட்டத்தைத் தலமைதாங்குகின்றன.
இதன் முழு விபரம் அடங்கிய தகவல்களும் அதன் பின்புலத்திலுள்ள அரசியலும் எதிர்வரும் வாரங்களில் இனியொருவில் வெளிவரும்.