சிறந்த கல்வியாளர்களை எப்படிக் கணிப்பது? பிரபலமான இயற்பியற்துறை வல்லுனர் எட் விட்டின் என்பவர், உயிரியல் துறை நிபுணர் சொலமன் ஸ்னைடர் இலும் அதிகமாக கல்வியாலாளர்கள் மத்தியில் பிரபலமானவரா? இவ்வாறு இன்று கல்வியாளர்கள் மத்தியில் செல்வாக்குச் செலுபவர்களைக் கண்டறியும் முறைமையை அமரிக்காவின் இன்டியான பல்கலைக் கழகம் பல்வேறு ஆய்வுகளின் பின்னர் கண்டறிந்தது. கூகுள் போன்ற இணையத் தேடு பொறிகளில் தேடப்பட்ட கல்வியியலாளர்களின் பெயர்கள், இடங்கள், வாசிக்கப்பட்ட நேரம், பிரதேசங்கள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு ஆய்வொன்றை இந்தியான பல்கலைக் கழகம் நடத்தியது. கடந்த ஆண்டு – 2013 – இன் இறுதியில் ஆய்வின் முடிவுகள் வெளியாகின. 35 ஆயிரம் கல்வியாளர்கள் குறித்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் உலகின் மிக அதிக செல்வாக்குச் செலுத்தும் கல்வியாளர் கார்ல் மார்க்ஸ் என்ற தகவல் வெளியானது. இரண்டாவது இடம் சிக்மன்ட் பிரய்ட் என்ற உளவியலாளருக்கும். எட்வார்ட் விட்டின் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
இதில் இரண்டாவது இடத்திலிருக்கும் சிக்மண்ட் பிரய்டை விட கார்ல் மார்க்சின் சிந்தனைகள் 22 மடங்கு அதிகமாக செல்வாக்குச் செலுத்துகின்றது என்பது இந்த ஆய்வின் மற்றோரு முடிவாகும்.
உலகில் ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த கார்ல் மார்க்சை ஐரோப்பாவிலும் அமரிக்காவிலும் சரிந்து விழுந்துகொண்டிருக்கும் முதலாளித்துவ அரசுகளின் பிடிக்குள் வாழும் மக்கள் மீண்டும் திரும்பிப்பார்க்க ஆரம்பித்துள்ளனர். அதன் மறுபக்க்கத்தில் கம்யூனிசத்திற்கு எதிரான புதிய திட்டமிட்ட பிரச்சாரங்களை பல்தேசிய பெருநிறுவனங்களின் ஊடகங்கள் ஆரம்பித்துள்ளன.