Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உலகின் வறிய நாடுகளில் ஒன்றான இந்தியப் பணம் வெளிநாடுகளில்

வெளிநாடுகளில் பதுக்கிய இந்தியர்களின் கறுப்புப் பணம் குறித்த விவரங்களை செக் குடியரசு மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இந்திய அரசிடம் வழங்கியுள்ளன.

இது தொடர்பான குறுந்தகடுகளை தங்களது தூதரகங்கள் மூலமாக மத்திய அரசிடம் பின்லாந்து, செக் குடியரசு ஒப்படைத்துள்ளன.

ஆனால் இதில் உள்ள பல பெயர்கள் பினாமிகள் என்று தெரியவந்துள்ளன. இவர்கள் மூலமாக பணத்தை பதுக்கி வைத்துள்ள முதலாளிகள் குறித்து தகவல் சேகரிக்க வருமான வரித்துறை தீவிரமாக களமிறங்கியுள்ளது.

இதுவரை ஜேர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான், தென் கோரியா, டென்மார்க் உள்ளிட்ட 24 நாடுகள் கறுப்புப் பணம் வைத்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்களை இந்தியாவிடம் வழங்கியிருந்தன குறிப்பிடத்தக்கது.

ஆனால், பெரும்பாலான கறுப்புப் பணத்தை குவித்துள்ள சுவிஸ், இந்தியர்களின் விவரத்தை தர தொடர்ந்து மறுத்து வருகிறது.

Exit mobile version