உலகின் வறிய நாடுகளில் ஒன்றான இந்தியா தனது முதலாவது செயற்கைக்கோளை விண்ணில் எவுகிறது.
இந்திய ராணுவத்திற்கு என உருவாக்கப்பட்டுள்ள முதற்செயற்கை கோள் இதுவாகும். ஜிசாட்-7 அல்லது ருக்மணி என பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கை கோள் 2 ஆயிரத்து 625 கிலோ எடையுடன் நாளை (வெள்ளிக்கிழமை) பிரெஞ்ச் கயானாவிலிருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியபெருங்கடல் பகுதியில் 2 ஆயிரம் நாட்டிகல் மைல் தூரம் அளவிற்கு கண்காணிப்பை மேற்கொள்ள முடியும். இந்தியப்பெருங்கடல் மட்டுமல்லாது வங்ககடல் மற்றும் அரபிக்கடல் , மலாக்கா நீரீணை பகுதிகளையும் கண்காணிக்க முடியும்.
இந்த செயற்கை கோளில் யு.எச்.எப், எஸ். கேயூமற்றும் சி வகை டிரசன்ஸ் பேண்டுகள் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கடற்படை மட்டுமல்லாது விமானப்படை தரைப்படை ஆகியவற்றிற்கும் பயன்மிக்கதாக அமையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.