Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உலகின் மோசமான 10 மனிதாபிமான நெருக்கடிகளுக்குள் இலங்கையும்!

உலகில் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகள் 10 இற்குள் இலங்கை நெருக்கடியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு என்ற சர்வதேச மனிதாபிமானக் குழு தனது வருடாந்த அறிக்கையை நேற்று முன்தினம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் மோசமான மனிதாபிமான நெருக்கடிகளைப் பட்டியலிட்டுள்ளது.

கிழக்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகள், ஆப்கான் வன்முறை மற்றும் பொதுமக்களுக்கான உதவிகள் துண்டிக்கப்பட்டிருப்பது, சோமாலியாவில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவப் பராமரிப்பு இல்லாதிருப்பது வடக்கு யேமனில் வன்முறைகள் தெற்கு சூடான் டார்பர் பகுதியில் வன்முறை, நோய், சுகாதாரப் பராமரிப்பு இல்லாமை, சிறுவர் போஷாக்கின்மைக்கான சிகிச்சைக்காக போதிய நிதியுதவி இல்லாமை, இலங்கையில் யுத்தத்தால் அகப்பட்டுள்ள பொதுமக்கள், எயிட்ஸ்/எச்.ஐ.வி சிகிச்சைக்கான நிதியுதவியில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை, பாகிஸ்தானில் வன்முறை மற்றும் பொதுமக்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது, அலட்சியப் படுத்தப்பட்டிருக்கும் கலாஅசார் உறங்கும் வியாதிகள், குடற்புண் போன்றவை தொடர்பாக போதிய ஆராய்ச்சியோ, சிகிச்சையோ இல்லாமை இருப்பது என்பன உலகின் மோசமான மனிதாபிமான நெருக்கடிகளென எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு பட்டியலிட்டுள்ளது.

Exit mobile version