மனிக் பாம் முகாம்களுக்குச் செல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும், முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க அனுமதி மறுத்திருப்பதிலிருந்தே, சிறிலங்க அரசு தமிழர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதனை உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று சம்பந்தன் கூறியுள்ளார்.
தமிழர்கள் 2ஆம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர் என்பதை நேற்றைய சம்பவம் உணர்த்துகிறது. அரசு தனது நிலையில் இறங்கி வந்துள்ளதாக நினைத்தோம். ஆனால், அது மாறவில்லை என்பதை உணர முடிகிறது என்று இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
இதே வேளை புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் அரச ஆதரவாளர்கள் முகாம்களில் மக்கள் அடைக்கப்பட்ட நாளிலிருந்தே அங்கு சுதந்திரமாகச் சென்று வருவதும், பின்னதாக முகாம்களில் எல்லா வசதிகளோடும் மக்கள் வாழ்கிறார்கள் என்று பிரச்சாரம் மேற்கொள்வதும் தெரிந்ததே.
தமிழ்ப் பேசும் மக்களின் எதிர்காலம் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரச ஆதரவு துணைக்குழுக்களின் ப்பவாத அரசியலிடையே ஊசலாடுகிறது.