இலங்கை, இந்தியா, ஆபிரிக்க நாடுகள், லத்தின் அமரிக்க நாடுகள் போன்ற காலனி ஆதிக்கச் சுரண்டலிலிருந்து புதிய காலனியத்திற்குள் மாற்றுவதற்கு 60 களில் இந்த இரு இராட்சத நிதி நிறுவனங்களும் உதவி புரிந்தன. முதலில் எண்ணை விலையை அதிகரித்து காலனி ஆதிக்கத்திலிருந்த நாடுகளின் தேசிய மூலதன வளர்ச்சியைத் தடுக்க உலக வங்கி உதவிபுரிந்தது. பின்னதாக வளர்ச்சிக்கு நிதி வழங்குவதாக வறிய நாடுகளுக்கு இரண்டுவீத வட்டிக்கு நிதி வழங்கிய இந்த நிறுவனங்கள் பத்து ஆண்டுகளுக்கு உள்ளாக 1980 இல் வட்டியை 18 வீதமாக உயர்த்தின. இந்தக் கடனை மீளச் செலுத்த முடியாத நிலைக்கு நாடுகள் வந்து சேர, அதே நாடுகளின் உள் நாட்டுப் பொருளாதாரத்தை மறு சீரமைக்கப் போவதாக உலக வங்கி நிபந்தனை விதித்தது. மக்கள் சொத்தைத் தனியார் மயப்படுத்தல், அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தல், வழங்களை குறைந்தவிலையில் பல்தேசிஅ நிறுவனங்களுக்கு விற்றல் போன்ற புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இலங்கையில் புலிகளுக்கு எதிரான யுத்த காலத்தில் பயங்கரவாதத்தை அழிப்பதாகக் கூறிய இலங்கை பாசிச அரசின் இராணுவப் பொருளாதாரதிற்குத் தீனி போட்ட நிறுவனனங்களில் இந்த இரண்டு நிறுவனங்களும் பிரதானமானவை.
இப்போது மீண்டும் இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி உலக வங்கி வழங்கியுள்ளது. நாட்டின் சுகாதாரத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கும் வங்கி வெகு விரைவில் இலவச மருத்துவத்தை முற்றாக அழித்து துடைத்தெறிந்துவிடும்.
வறுமையில் செத்துப் போகும் மக்கள் போராடாமலிருப்பதற்காக தன்னார்வ நிறுவனங்களும் ஐக்கிய நாடுகளும் உதவி என்ற பெயரில் எலும்புத் துண்டுகளை உணவாகவும் காலாவதியான மருந்தை இலவசமாகவும் வழங்கும்.
புலம் பெயர் நாடுகளிலிருந்து ஐக்கிய நாடுகளைக் கூட்டிவந்து தமிழீழம் பிடித்துத் தருவதாக ஐந்தாம் படை தமிழ் சமூக விரோதிகள் கூக்குரலிட்டுக்கொள்வர்.