இதே போன்று பிரான்சிலும் பாசிச நிறவெறிக்கட்சியான தேசிய முன்னணியும்(FN) திடீர் எழுச்சி பெற்றுள்ளது. இந்த இரு பாசிசக் கட்சிகளும் பல மில்லியன்களை முதலிட்டுப் பிரசாரம் மேற்கொள்கின்றன.
இனிவரும் காலங்களில் வெள்ளையினத்தவர்கள் அல்லாத வெளிநாட்டவர்கள் மீது படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்படலாம்.
தெற்காசியாவில் இலங்கை, மியான்மார் போன்ற நாடுகளில் பாசிஸ்டுக்களின் ஆட்சி ஏற்கனவே நிறுவப்பட்டுவிட்டது. உள்நாடுகளில் ஏற்படும் விசேட சூழ் நிலைகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப பாசிஸ்டுக்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறார்கள். இவர்களின் உருவாக்கத்திற்கு பல்தேசிய கோப்ரட் நிறுவனங்களின் பணம் தாராளமாக வழங்கப்படுகிறது.
இந்தியாவில் மதவெறி கொண்ட மிருகம் போன்று உலா வந்த பிரதமரான நரேந்திர மோடி என்ற பாசிஸ்ட் பிரதமராக்கப்பட்டுள்ளார். இன்று உலகம் முழுவதும் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு பல்தேசிய கோப்ரட் நிறுவனங்கள் தமது உச்சபட்சக் கொள்ளையை நடத்துவதற்கு இவ்வாறான பாசிஸ்டுக்களின் பிரசன்னம் தேவைப்படுகிறது.
உலகம் முழுவதும் இந்த நூற்றாண்டில் முதல்தடவையாகப் பலமடைந்து வரும் உழைக்கும் மக்களின் போராட்டங்களை முளையிலேயே சிதைப்பதற்கும் இப் பாசிஸ்டுக்களும், அவர்களின் மத மற்றும் தேசிய வெறியும் அதிராகவர்க்கத்திற்குத் தேவைப்பாடுகிறது.
புதிய பிரதமர் மோடியை வாழ்த்துவோம்;வரவேற்போம்! : ப.வி.ஶ்ரீரங்கன்