Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உற்சாகமடைந்துள்ள இந்து மதவெறி அமைப்புக்கள்

உலகின் வறிய நாடுகளின் பட்டியிலில் முதலிடத்தில் திகழும் இந்தியவில் அயோத்தி குறித்த நீதிமன்றத் தீர்ப்பானது பெரும் சிக்கல்களை உருவாக்கியுள்ளது. நம்பிக்கையை மட்டும்மே தீர்ப்பாக்கிய நீதிமன்றத் தீர்ப்பானது சர்வதேசச் சட்டங்களுக்கும் கூட முரணானது என்று சட்ட வல்லுனர்கள் கருதுகின்றனர். இஸ்லாமியர்கள் மற்றும் தலித் சிறுபாயினரை ஒடுக்குன் வகையில் அமைந்துள்ள இந்தத் தீர்ப்பானது அவர்களுக்கு எதிரான நிறுவன மயப்பட்ட தாக்குதலை கட்டமைத்துள்ளது.

இவ்வேளையில் உற்சாகமடைந்துள்ள அடிப்படைவாத மதவெறி அமைப்புக்கள் தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிடுகின்றன
அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் உறுதி செய்யப்பட்டிருப்பதால் அங்கு இராமருக்கு பிரமாண்ட கோயில் கட்டப்படும் என்று விசுவ இந்து பரிஷத் பொதுச் செயலர் பிரவீண் தொகாடியா தெரிவித்தார்.

அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து டெ‌ல்லியில் செய்தியாளர்களிடம் பே‌சிய அவ‌ர், அயோத்தி வழக்கு தொடர்பாக அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறோம். சர்ச்சைக்குரிய இடம், இராமர் பிறந்த இடம்தான் என்று மூன்று நீதிபதிகளும் ஏகமனதாகத் தீர்ப்பில் உறுதி செய்துள்ளனர். இராமர் கோயில் தொடர்பான இந்துக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து உயர் நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த 450 ஆண்டுகளில் நம் முன்னோர்களில் சுமார் 4 லட்சம் பேர் தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளனர். அவர்களது தியாகத்தை இப்போது நினைவுகூர வேண்டும். சாதுக்கள், வழக்கறிஞர்கள், செய்தியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த தீர்ப்பு கடவுள் இராமருக்கு கிடைத்த வெற்றி. சர்வதேச அளவில் 100 கோடி இந்துக்களுக்கு கிடைத்த வெற்றி. தீர்ப்பின் மூலம் அயோத்தியில் இராமர் கோயில் கட்ட வழி ஏற்பட்டுள்ளது. நீதித்துறை மீது இந்துக்கள் வைத்துள்ள நம்பிக்கை இத்தீர்ப்பின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

அயோத்தியில் 110 அடி நீளமும் 90 அடி அகலமும் கொண்ட இடம், இராமர் பிறந்த இடம்தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சுற்றியுள்ள இடத்தில் ராமருக்கு மாபெரும் கோயில் கட்டப்படும். இதற்கு அனைத்து சமுதாயத்தினரும் ஆதரவு அளிக்கவேண்டும். மத்திய வக்ஃப் வாரியத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அலாகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதுவரை நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும்.

சர்ச்சைக்குரிய 110 அடி நீளமும் 90 அடி அகலமும் கொண்ட இடம், ராம ஜென்ம பூமியா அல்லது இல்லையா என்பதே அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன் இருந்த வழக்கு தீர்ப்பின் மூலம் அந்த இடம், ராம ஜென்ம பூமிதான் என்ற உண்மை தெரியவந்துள்ளது என்று தொகாடியா கூ‌றினா‌ர்.

Exit mobile version