கிரேகத்தில் பல்தேசிய நிறுவனங்களும் அவற்றின் பணத்தைப் பதுக்கிவைக்கும் நிறுவனங்களான வங்கிகளும் பிணைப்பணமாக வழங்கிய பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்காகவும் மேலும் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் வறிய மக்களைச் சுரண்ட கிரீஸ் அரசு தீர்மானங்களை நிறைவேற்றியது. அரச நிறுவனங்கள் சிலவற்றின் ஊழியர்களின் ஊதியத் தொகை வீதமாகக் குறைக்கப்பட்டது. ஒய்வூதியம் 15 வீதத்தல் குறைக்கப்பட்டது. நவம்பர் 7ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்திற்கு எதிராக பல்லாயிரக்கனக்கான தொழிலார்கள் இன்று பாராளுமன்றத்தின் முன்னால் குழுமி போராட்டங்களை நடத்தினர். தவிர, பல் வேறு நகரங்களிலும் போராட்டம் நடைபெற்றது. கடந்த தேர்தலில் பெரும் மக்கள் ஆதரவைப் பெற்ற சிரிஸா என்ற இடதுமுன்னணி தொழிற்சங்கங்களின் போராட்டங்கள் பலவற்றைத் தலைமை வகித்தது.
கருத்துக் கணிப்பு ஒன்றில் 90 வீதமான மக்கள் நாளந்த வாழ்விற்கே வழியற்ற நிலையிலிருப்பதாகத் தெரிவித்தனர். முதலாளித்துவ பொருளாதார அளவீட்டு முறையில் 2013 இல் பொருளாதாரம் 4.5 வீதத்தால் வீழ்ச்சியடையும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.