Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உயர்த்தப்பட்ட கட்டணத்தைக் குறைக்கமுடியாது!

சமீபத்தில் தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இந்த கட்டண உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்தது.

பேருந்து கட்டணத்தை உயர்த்துவது என்பது தமிழக அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது.அரசின் அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் தலையிட முடியாது.

கட்டணத்தைக் குறைக்கமுடியாது என தமிழக அரசு பதிலளித்துள்ளது.

Exit mobile version