Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உமாசங்கர் நேர்மையானவர் – டி.கே. ரங்கராஜன்

சென்னையில் வியாழன் அன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, நாடாளுமன்ற மாநிலங்க ளவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி உமா சங் கர் 1990ல் மத்திய தேர் வாணைக் குழுமம் மூலமாக தேர்வு பெற்றவர் என்றும், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அவரைப் பற்றிய அனைத்து தகவல்களையும் முற்றிலும் உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே அவருக்கு ஐஏஎஸ் தகுதி வழங்கப்பட்டது என் பதை சுட்டிக்காட்டினார்.அரசுக்குச் சொந்தமான எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக உமாசங்கர் நியமிக்கப்பட் டிருந்தார். அங்கு நடைபெற்ற பல ஊழல் களை அவர் அரசின் கவனத் திற்குக் கொண்டுவந்தார். ஆனாலும் எவ்வித நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை.அரசு கேபிள் டிவி நிறு வனத்தின் மேலாண்மை இயக்குநராக அவரை நியமித்தது அரசாங்கம் தான். அப்போது ஆட்சி யாளர்களுக்கும், சுமங்கலி தொலைக்காட்சி சேவை நிறுவனத்திற்கும் இடையே முரண்பாடு இருந்தது. சுமங் கலி நிறுவனத்தை அரசு உடைமை ஆக்க வேண்டும் என்று கூட அப்போது உமாசங்கர் அறிக்கை அளித் திருக்கிறார்.உமா சங்கரின் தந்தை ஒரு இந்து. தாய் ஒரு கிறிஸ் தவர். எனவே தந்தையின் மதமே சட்டப்படி அங்கீ கரிக்கப்படுகிறது என்ற நிலையில், உமா சங்கர் அளித்துள்ள சாதிச் சான்றி தழில் எந்த மோசடியும் நடந்துவிடவில்லை. மேலும், அவர்களது குடும் பம் அதற்கு முன்பே இந்து மதத்திற்கு மாறிவிட்டது. அத்துடன் மத்திய அரசு தேர்வாணைக் குழுமம் தேர்வு செய்து மத்திய அர சின் அலுவலரான ஒருவர் மீது மாநில அரசால் நட வடிக்கை எடுக்க இயலாது.தன்னை அரசு எதற்காக நியமித்ததோ அந்தப் பணியை அவர் நேர்மையாக நிறை வேற்றியிருக்கிறார். இந்நிலையில், அவரை இடை நீக்கம் செய்து பழி வாங்குவது இயற்கை நீதிக்குப் புறம்பானது. எனவே, அவர் மீது எடுக்கப்பட் டுள்ள நடவடிக்கை விலக் கிக்கொள்ளப்பட வேண் டும். மீண்டும் அவர் பணி யைத் தொடர அனுமதிக் கப்பட வேண்டும் என்றும் டி.கே. ரங்கராஜன் கூறினார்.

Exit mobile version