மட்டக்களப்பு உன்னிச்சையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உன்னிச்சை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி எஸ்.ரட்ணமலல ‘ நான் பௌத்தனாக இருந்து பௌத்த விகாரைகளுக்குச் சென்று தானம் செய்வதை விட, யுத்த அனர்த்தங்களால் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து தவிக்கும் உன்னிச்சைப் பகுதி மக்களுடன் வாழ்வதற்கே விரும்புகிறேன், இம் மக்களின் மேம்பாட்டிற்கும், துயரைத்துடைப்பதற்கும் என்னாலியன்ற சேவைகளை இதயபூர்வமாக நான் மேற்கொள்வேன்” எனப் பேசியிருக்கிறார்.
இNது வேளை நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் ஒருசில சிங்கள சகோதரர்கள் இனப்பிரச்சினைக்கான காரணம் சிங்கள அரசியல் தலைவர்களின் அரசியல் நடவடிக்கைகள் தான் எனவும், பிரச்சிகை;கான அரசியல் தீர்;வு முன்வைக்கப்பட வேண்டும் எனவும் வாக்குமூலம் அளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.