Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உத்தர் பிரதேசத்தில் சாதி ஊர்வலங்களுக்குத் தடை

Uttar-Pradeshஉத்தரப்பிரதேச மாநிலத்தில் சாதி அடிப்படையில் பேரணி நடத்த அலகாபாத் ஐகோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு, மாநில அரசு, தேர்தல் கமிஷன், 4 அரசியல் கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சட்டத்துறையைத் தமது ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவானதாக இச்சட்டம் மாறும் என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்ற போதிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது. தமிழகத்தில் சாதி வெறியூட்டி அதனைத் தமிழ்த் தேசிய நச்சாக மாற்றும் ராமதாஸ் சீமான் போன்றவர்களின் கூட்டு இளவரசன் போன்ற இன்னும் பல உயிர்களைப் பலிகொள்ளும் அபாயம் காணப்படுகிறது.
அலகாபாத் நகரை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் மோதிலால் யாதவ் என்பவர் தொடர்ந்த பொதுநலன் வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டு இந்த துணிச்சலான தடையை விதித்துள்ளது. நீதிபதிகள் உமா நாத் சிங், மகேந்திர தயாள் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழ் நாட்டில் ராமதாஸ் போன்றவர்களின் உயிர்பலியெடுக்கும் கட்சிகளுக்குக்கூட இன்னும் தடையுத்தரவு பிறப்பிக்கப்படாத நிலையில், சீமான் ராமதாசையும் தன்னையும் முதலமைச்சராக்கிப் பார்க்க ஆசைப்படுகிறார்.

Exit mobile version