2010-11 ஆம் ஆண்டுக்கான தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை கொள் கை விளக்கக்குறிப்பைப் படிப்பவர்க ளுக்கு முதலில் தோன்றுவது இப்படி அற்புதமாகச் செயல்படும் அரசை மெச்ச வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். மெச்சுவதற்கு முன்பு நடைமுறையில் என்ன இருக்கிறது என்பதைப் பார்த்து விடுவது நல்லது.அக்குறிப்பின் 26வது பத்தியில் எப்படி 1955 ஆம் ஆண்டு குடியுரிமைப் பாது காப்புச்சட்டத்தையும், 1989 ஆம் ஆண்டு வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தினை யும் செயல்படுத்துவது என்பது பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. அரசு தீவிர நட வடிக்கை எடுக்கிறதாம். இதற்கென காவல்துறைத் தலைவர் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்) அவர்கள் தலைமை யின் கீழ் சமூக நீதி மற்றும் மனித உரிமை கள் பிரிவு ஒன்று சென்னையைத் தலை மையிடமாகக் கொண்டு இயங்கி வரு கிறது என்கிறது குறிப்பு. வடிவேலு பாணி யில், “சொல்லவேயில்லை…” என்றுதான் பலரும் கேட்பார்கள். அதோடு அரசு நிற்கவில்லை. மேலும் தீவிரமாக இயங்கியிருக்கிறதாம். இந்த காவல்துறைத்தலைவரின் கீழ் சென்னை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், விழுப்புரம், இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய ஏழு மாவட்டங்களில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் களைத் தலைவர்களாகக் கொண்டு, ஏழு மேற்பார்வைக்குழுக்களும், காவல்துறை ஆய்வாளரைத் தலைவராகக் கொண்டு 34 நடமாடும் காவல் குழுக்களும் செயல் பட்டு வருகின்றன என்கிறது தமிழ்நாடு அரசு. பரம ரகசியமாக இயங்கிக் கொண் டிருக்கிறது போலும் இந்தப் பிரிவு. நாட் டில் தீண்டாமைக் கொடுமைகளா இல்லை…? எவ்வளவு பிரச்சனைகள். இந்த நடமாடும் மற்றும் நடமாடாத குழுக் கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?
அடுத்ததாக, தீண்டாமை ஒழிப்பு பிரச் சாரத்தை தமிழக அரசு செய்து கொண்டி ருக்கிறதாம். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் குறுந்திரைப்படங்கள் கிராமங்களில் திரையிடப்படுகின்றன என்கிறது கொள்கை விளக்கக்குறிப்பு. குறும்படங்கள் ஓடியதாகத் தெரியவில் லை. இவர்கள் சுற்றும் ரீல்தான் படமாக விரிய வேண்டும். அண்ணல் அம்பேத்க ரின் திரைப்படம் ஏற்கெனவே உருவாகி விட்டது. இதைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும். இந்தச் சாதாரண வேலையைக்கூட செய்ய முன்வராத அரசு குறும்படங்கள் என்ற பெயரில் பெரிய ரீல் பெட்டியோடு சுற்றிக் கொண்டிருக் கிறது.மூன்றாவதாக, தீண்டாமை ஒழிப்பில் சிறந்த கிராமங்களைத் தேர்ந்தெடுத்து ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்குகிறோம் என்று கூறப்பட்டுள்ளது. 2009-10 ஆம் ஆண் டில் 31 கிராமங்களைத் தேர்வு செய்து கொடுத்தும் விட்டார்கள். இவர்களின் கணக்குப்படி ஒரு ஆண்டில் 31 கிராமங் களில் தீண்டாமையை ஒழித்திருக்கிறார் கள். கொள்கை விளக்கக்குறிப்பில் மற்ற பொய்களை எழுதுவது போல இதையும் எழுதி வைத்துவிட்டார்கள். கிராமங் களின் பெயர்களைப் பட்டியலிட்டால் அம்பலமாகிவிடுவார்கள் என்பதுதான் அதற்குக் காரணமாக இருக்கும். திருப்பூர் மாவட்டம் பெரமியம் கிராமத்திற்கு இந்த ஒரு லட்சம் ரூபாய் தந்ததில்தான் இவர் கள் முகமூடி கிழிந்ததே..நான்காவது, மக்கள் விழிப்புணர்ச்சித் திட்டம். அதன் நோக்கங்களை விவரித் துள்ளார்கள். “பலே… பலே… என்ன.. சமூக நோக்கு“ என்றுதான் இந்தக் காகிதத்தை பார்க்கையில் தோன்றும். அதில் முதல் நோக்கமே, சட்டம் மற்றும் விதிகளை எவ்வாறு முனைப்புடன் காவல்துறை மூலம் செயல்படுத்துவது என்பதுதான். உத்தப்புரம் தலித்துகளின் கோரிக்கைக ளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடிய தலைவர்கள் மற்றும் தலித் துகளின் மீது கோரத் தாண்டவம் ஆடிய முனைப்பைத்தான் நாடே பார்த்ததே…?விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக தேநீர் விருந்துகளை நடத்துகிறார்களாம். மக்கள் விழிக்கும்போது இவர்கள் கண்களை மூடி விடுகிறார்கள். எத்தனை, எத்தனை கிராமங்களில் இரட்டை டம்ளர்கள்…ஏன்… மூன்று டம்ளர்கள்கூட இருக் கிறதே… சில விஷயங்கள் பற்றிக் கேள்வி கேட்கும்போது கேரளாவில் என்னவோ அதுதான் தமிழகத்திலும் என்று தமிழக முதல்வர் பதிலளிப்பது உண்டு.கேரளாவில் ஆலய நுழைவுக்கென்று தனிக்காவல்பிரிவு உள்ளது. எங்காவது தலித்துகளைக் கோவிலில் நுழைய விடாவிட்டால் இந்தப்பிரிவு அங்கு செல் லும். தலித்துகள் உள்ளே செல்வதை உத் தரவாதப்படுத்தும். ஆனால் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். அவசரப் பட்டு அப்படியொரு பிரிவை இங்கு ஏற் படுத்திட வேண்டாம். கோவிலுக்குள் நுழைய விட மாட்டேன் என்கிறார்கள் என்று காவல்துறையை அழைத்தால், அழைத்தவர்களைத் தூக்கி உள்ளே போட்டுவிட்டு மிதி, மிதியென்று மிதிப் பார்கள். ஆதிக்க சாதியினருக்கு சலாம் போட்டுக் காவல் காப்பார்கள்.
பிரிவுக்கு எப்படிப் பெயரிட்டால் என்ன…? லகான் யார் கையில் என்பது தானே முக்கியம். உத்தப்புரத்தில் காவல் துறை இயங்குவதே ஆதிக்க சாதியி னரின் சாதிச்சங்கக் கட்டிடத்தில் இருந்துதானே.. இதுதான் உத்தப்புரத்தை உத்தமபுரமாக்கிய லட்சணமா?