நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுஉலையில் எரிபொருள் நிரப்ப அண்மையில் மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனை கண்டிக்கும் விதமாக இடிந்தகரையில் சுதந்திர தினமான நேற்று அனைத்து வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது.
மேலும் சவப்பெட்டி ஊர்வலம் நடத்திய அணுஉலை எதிர்ப்பாளர்கள் கடைசியில் சவப்பெட்டியை எரித்தனர். இந்த நிலையில் இறையாண்மையை சிதைக்கும் வகையில் சவப்பெட்டி ஊர்வலம் நடத்துவது, சுதந்திரத்தை அவமதிக்கும் வகையில் கறுப்புக் கொடி ஏற்றுவது உள்பட் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அணுஉலை எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் உள்பட 1980 பேர் மீது கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்திய சுந்ததிரதினம் முடிவுற்று இரண்டாவது நாள் முழு சமூகத்தின் மீது ஜெயலலிதா போலிஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்திய மக்கள் சுதந்திரம் தமக்கானது அல்ல என புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.
தொடர்புடைய பதிவுகள்: