பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் இயங்கும் உத்தியோகபூர்வமற்ற ஆயுதக்குழுவினரே ‘உதயன்’ பத்திரிகை மீது தாக்குதல் நடத்தியதுடன், குடாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் பங்குபற்றிய உண்ணாவிரதப் போராட்டத்திலும் குழப்பம் விளைவித்தனர் என்பதை நான் பொறுப்புடன் கூறுவேன்” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம், சாதியம் போன்ற பல்வேறு முகமூடிகளுடன் இயங்கிவரும் இந்த இராணுவத் துணைக்குழுவினருக்கு எதிராக புலம் புலம் பெயர் நாடுகளில் ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மக்களின் அலவலத்தில் உண்பதற்குப் பழகிக்கொண்டுள்ள இக்குழுவினரைச் சட்டரீதியான வழிகளில் எதிர்கொள்வது குறித்து இனியோரு… சாட்சிகளைத் திரட்டிவருகிறது.
பல்வேறு தளங்களில் பெரும் வலையமைப்பு ஒன்றை உருவாக்கிவரும் இவர்கள் இலங்கையில் இராணுவத்தின் தொடர்ச்சியான நிலப்பறிப்பிற்கும், சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் துணைபோகின்றனர்.