
கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் பல மாதங்களாக போராட்டம நடந்தது. இதனால் அணுமின் நிலைய செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இடிந்தகரையில் உதயகுமார் தலைமையில் தொடர் உண்ணாபிரதம் இருந்தனர். திடீர் என்று நேற்று முன்தினம் உண்ணா விரதத்தை உதயகுமார் வாபஸ் பெற்றுக் கொண்டார்.
ஆனாலும் போராட்டம் தொடரும் என்று அறிவித்தார். இந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள உதயகுமார் வீட்டில் மத்திய அரசு அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினார்கள்.
முதலில் வீட்டின் மாடியில் சென்று சோதனை நடத்தினார்கள். அதன் பிறகு கீழ்த்தளத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மனைவி மீராவும் உடன் இருந்தார். அவர் அதிகாரிகளை ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்று காண்பித்தார். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.
போராட்டத்தை நிறுத்தக் கோரிய அரசு இப்போது போலிக் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அதன் தலைவர்களை அழிக்க முற்படுகிறதா என்ற சந்தேகங்கள் வலுக்கின்றன.