கூடங்குளம் போராட்டத்தைத் தலமை தாங்கிய உதயகுமார் அமரிக்கப் பல்கலைகழகம் ஒன்றின் கௌரவ பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். 6 மாதங்களுகு ஒரு தடவை அமரிக்கா செல்வது வழமை. இந்த நிலையில் அவரது பாஸ் போர்ட்டை ஒப்படைக்குமாறு அரசு அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
உதயகுமார் மீது கூடங்குளம், பழவூர் போலீஸ் ஸ்டேஷன்களில் 98 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே ஜே.3347811 என்ற எண் கொண்ட பாஸ்போர்ட்டை 15 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும். அத்துடன் நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள் தொடர்பாகவும் விளக்கம் அளிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்படைக்கவில்லை எனில் மறுஉத்தரவின்றி பாஸ்போர்ட் முடக்கப்படும், என்று கூறப்பட் டுள்ளது. இதுகுறித்து உதயகுமாரிடம் கேட்ட போது, ‘‘ நோட்டீஸை சட்டரீதியாக சந்திப்பேன்‘‘ என்றார்.