இந்திய அரசின் ஆலோசனையின் அடிப்படையில் இயங்குவதாகக்
ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயம் தொடர்பில் மேலும் கூறியதாவது
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்மந்தனை அண்மையில் நான் சந்தித்து பேச்சு நடத்தினேன். இந்த சந்திப்பு உத்தியோகபற்றற்ற முறையில் நடைபெற்றது.
இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. இது ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை என்று கூறலாம். காரணம் அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த நாங்கள் எதிர்பார்க்கின்றோம். முக்கியமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்க்கின்றார். விரைவில் இது தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெறும்.