இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இன்னமும் பல பொதுமக்கள் அகப்பட்டிருக்கும் வடபகுதியில், உடனடி போர்நிறுத்தம் செய்யுமாறு இலங்கை ஜானாதிபதியை சந்தித்த இந்திய தூதுவர்கள் இருவரும் கோரியிருக்கின்றனர்.
இந்த சந்திப்புக்கு முன்னதாக இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் நிறுத்தப்பட்டாக வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
கடந்த மூன்று மாதங்களில் இலங்கை மோதல்களில் சுமார் ஆறாயிரத்து ஐநூறு பேர் கொல்லப்பட்டதாக கூறும் ஐ.நா. ஆவணம் ஒன்று கசிந்துள்ள வேளையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.