Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உடனடித் தீர்வை எதிர்பார்க்க முடியாது : நாலரை வருடங்களின் பின் நவி பிள்ளை

navi_pillai_lankaகாணாமல் போனவர்களின் உறவினர்கள் நவநீதம் பிள்ளை சென்ற இடங்களிலெல்லாம் போராட்டம் நடத்தினார்கள். பல மனுக்கள் அவரிடம் கையளிக்கப்பட்டன. இந்த அழுத்தங்களுக்குப் பதிலளித்த நவநீதம் பிள்ளை, ராஜபக்சவுடனான சந்திப்பில் இது குறித்துப் பேசவிருப்பதாகவும் பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வை எதிர்பார்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்,
இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து தான் ஆய்வுசெய்து வருவதாக இனப்படுகொலை நடத்தப்பட்டு ஐந்து வருடங்களின் பின்னர் கூறும் அமரிக்க அடியாள் அமைப்பான ஐ.நா சபையின் பிரதிநிதி நவநீதம் பிள்ளை நாளை காணாமல் போனோரின் உறவினர்களைச் சந்தித்துப் பேசினார்.
உலகில் போராட்டங்களைத் தணிப்பதற்கும் அரசுகளுக்கு அழுத்தம் வழங்கி தமது நலன்களைஉறுதிப்படுத்திக்கொள்ளவும் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் ஐ-நா போன்ற அமைப்புக்கள் பயன்படுகின்றன.. இவற்றை உணர்ந்துகொண்டு தம்மைத் தகவமைத்துக்கொண்ட போராட்ட அமைப்புக்கள் அழிக்கப்படுவதிலிருந்து தற்காத்துக்கொண்டுள்ளன.
இலங்கைக்கான தனது பயணத்தின் போது 3 நாள்களை நவநீதம்பிள்ளை வடக்கு – கிழக்கில் செலவிட்டிருந்தார். இதன்போது காணாமற் போனோரின் உறவுகள் தமது பிள்ளைகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி நவநீதம்பிள்ளை செல்லும் இடமெல்லாம் பின்தொடர்ந்து சென்று கவனவீர்ப்புப் போராட்டங்களை நடத்தினார்கள்.
ஐ.நா இன் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் இராணுவப் புலனாய்வாளர்கள் மத்தியில் போராடி உரிமைகளைப் பெற்றுக்கொள்ளத் தயாராகும் மக்கள் வாக்குப் பொறுக்கும் அரசியல் கட்சிகளை நம்பவில்லை. அவர்களது தலைமையின்றியே மக்கள் தெருக்களில் நம்பிக்கையுடன் போராடுகின்றனர். இன்று அரசியல் தலமையற்ற அனாதைகளான மக்கள் மத்தில் போராட்டங்களும் புரட்சிகர அமைப்புக்களும் தோற்றம் பெறக்கூடாது என்பதே நவி பிள்ளையினதும் ஏகபோக அரசுகளும் துயர்.

Exit mobile version