கிழக்கு மாகாணத் தேர்தல் பிரச்சாரங்களில் பிள்ளையானின் பிரதேச வெறி அதி உச்சத்தை அடைந்துள்ளது. பிரதேச வெறியை மட்டுமே தனது தேர்தல் வியாபார ஆயுதமாகப் பயன்படுத்தும் பிள்ளையான், வடக்கில் மட்டுமே பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்படுகிறார்கள், வடக்கில் மட்டும் தான் நில ஆக்கிரமிப்பு நடைபெறுகிறது என்றும் கிழக்கில் அந்த அளவிற்கு ஏதுவும் நடைபெறவில்லை என்றும் பிள்ளையான் கும்பல் தேர்தல் பிரச்சாரத்தில் திரும்பத் திரும்பக் கூறிவருகிறது. பேரினவாதத்தின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்கும் தமிழ்ப் பேசும் மக்களைப் பிரதேசரீதியாகப் பிளவுபடுத்த முயலும் கருணா பிள்ளையான் போன்ற அரசின் அடிவருடிகள் தமது சுய இலாபத்திற்காக முழு சமூகத்தையும் இருளின் விழிம்பிற்குள் இழுத்துச் செல்ல முயற்சிக்கின்றனர். இதற்கு எதிரான காத்திரமான அரசியல் இலங்கையில் எந்தத் தரப்பிடமும் இருக்கவில்லை என்பது வட-கிழக்கு தமிழ் தேசிய இனத்தின் சாபக்கேடு.