Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உங்கள் ‘பாசத்திற்குரிய’ பாரதிராஜா இப்போது டக்ளஸ் தேவாவுடன்

bharathiraja_inioruதென்னிந்திய சினிமாக் கூத்தாடிகள் ‘தமிழ் உணர்வாளர்கள்’ என்ற தலையங்கத்தில் நடத்தும் களியாட்டங்களுக்கு ‘தேசியத்தின்’ பேரால் களம் அமைத்துக்கொடுப்பது புலம்பெயர் பிழைப்புவாதிகளின் செயற்பாடுகளில் பிரதானமானது. பாரதிராஜா என்ற தென்னிந்தியத் திரைப்ப்பட இயக்க்குனர் கடந்த வருடம் மார்ச் மாதம் பிரித்தானியாவிற்குச் சென்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் பிரதான அதிதியாகக் கலந்துகொண்டார். அதே வேளை சர்வதேசத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்ற அமைப்பு பாரதிராஜாவை அழைத்து மதிப்பளித்தது.

அதே பாரதிராஜா, இலங்கை பேரினவாத அரசின் துணைக்குழுவின் பிரதானியான ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துப் பேச்சுவர்தை நடத்தியுள்ளார். யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் டல்க்ளஸ் தேவானந்தா இயக்குனர் பாரதிராஜாவை நட்பின் நிமித்தமாக சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அதன் போது கருத்துவெளியிட்ட பாரதிராஜா வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பக மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளார்.

வடக்கில் அபிவிருத்தி என்ற பெயரில் நடத்தப்படும் திட்டமிட்ட அழிவு நடவடிக்கைகள் ஊடாக குடாநாட்டை வரண்ட, வளமற்ற நிலமாக மாற்றும் செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சுன்னாகம் அனல் மின்னிலையத்திலிருந்து பிரித்தானிய கொன்சர்வேட்டிவ் கட்சியைச் சார்ந்த நிர்ஜ் தேவா என்பவர் இணைந்து நடத்தும் அழிப்பு நடவடிக்கைக்கு எதிராக பறை-வோய்ஸ் ஒப் பிரீடம் என்ற அமைப்பு நாளை திங்கள் 3 மணிக்குப் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரித்தானியக் கிளையின் முன்னால் நீதி கோரும் போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. ஐந்தாம் படைகள் போன்று செயற்படும் புலம்பெயர் ஊடகங்களும், அமைப்புக்களும் இது தொடர்பாக கருத்துக்களை வெளியிட மறுத்து வருகின்றனர். பாரதிராஜா போன்ற உணர்ச்சி வியாபாரிகளை அழைத்துப் பிழைப்பு நடத்தும் இவர்கள் மக்களும், வளங்களும் அழிக்கப்படும் போது மூச்சுக்கூட விடுவதில்லை.

மேலதிக வாசிப்பிற்கு:

நமது மண்ணையும் மக்களையும் அழிவிலிருந்து பாதுக்காக உதவுவோம்: ஆர்பாட்டத்திற்கு அழைப்பு

தண்ணீர் கேட்டவர்கள் பயங்கரவாதிகளாக்கப்பட்டனர் : புலம்பெயர் தமிழர்களுக்குச் சவால்

யாழ்ப்பாணத்தை நஞ்ச்சாக்கும் நிறுவனத்தின் இயக்குனர் பிரித்தானியாவில்:புலம்பெயர் அமைப்புக்கள் எங்கே?

Exit mobile version