இவை இன்று வரை தொடர்வதாக அறிக்கை குறிப்பிடுகிறது. மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் 141 பக்க அறிக்கை, “நாங்கள் உங்களுக்குப் பாடம் கற்பிப்போம் : தமிழர்களுக்கு எதிரான இலங்கைப் பாதுகாப்புப் படைகளின் பாலியல் வன்முறை” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டிற்கும் 2012 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற 75 பாலியல் வன்முறைச் மற்றும் வன்புணர்வுச் சம்பவங்களைப் பட்டியலிடும் அறிக்கை இச்சம்பவங்கள் இரகசியமாக மற்றும் சட்டரீதியாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் மீதானது எனக் குறிப்பிடுகிறது.
மனித உரிமைக் கண்காணிப்பகத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இந்த அறிக்கையில் ஆண்களும், பெண்களும் பாலியல் வன்புணர்ச்சிக்கு தொடர்ச்சியாகப் பலநாட்கள், பல நபர்களால் உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இராணுவம், பொலிஸ், துணை இராணுவக் குழுக்கள் போன்றனவே இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள்.
சிறையிலிருக்கும் ஆண்களையும் பெண்களையும் வெளியில் தெரியாத எண்ணிக்கையிலான பல பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியதாக கண்காணிப்பகத்தின் ஆசியப் பிரிவு இயக்குனர் பிரட் அடம் தெரிவித்துள்ளார்.
போர்க்கால காடைத்தனங்கள் மட்டுமல்ல இன்றும் தொடரும் இலங்கை அரசபடைகளின் அட்டூழியங்கள் கைதிகளை ஆபத்தான நிலையில் வைத்திருக்கிறது என்று கூறுகிறார்.
இலங்கை அரச படைகளின் இன்றும் தொடரும் கோரமுகத்தை அம்பலப்படுத்தும் இந்த அறிக்கையின் தமிழ் வடிவம் வார இறுதியில் இனியொருவில் வெளியாகும்.