Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உக்ரையின் தேர்தலில் பில்லியனேர் ஜனாதிபதியானார்:நாசிக் கட்சி படுதோல்வி

ukrainepresidentஉக்ரையினில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அந்த நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் வர்த்தகருமான பெட்ரோ பொரோஷென்கோ அதிகப்படியான வாக்குகளைக் கைப்பற்றி ஜனாதிபதியானார். 55.7 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ள ஐரோப்பிய சார்பு பணக்காரரான இவர் அமெரிக்க ஐரோப்பிய கூட்டுச்சதியின் மூலம் விழுத்தப்பட்ட ரஷ்ய சார்பு ஆட்சியில் அங்கம்வகிதவர். பில்லியனேரான இவர் உக்ரையினின் பிரதான ஊடகங்களில் உரிமையாளரும் கூட. தனது பணத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஆட்சியாளர்களுடன் சமரசம் செய்துகொள்ளும் உக்ரையினின் புதிய ஜனாதிபதி சதிப்புரட்சியூடாக ஆட்சிக்குவந்த நாசிகள் அங்கம் வகிக்கும் பாராளுமன்றத்தை ஆதரிப்பார் என எதிர்பாக்கப்படுகின்றது. உக்ரையினின் பிரதான நாசிக் கட்சியான சபவோடாவிற்கு ஜனாதிபதித் தேர்தலில் 1.3 வீத வாக்குகளே கிடைத்துள்ளன.

வலதுசாரி அணி என்ற சதிப்புரட்சியில் ஆட்சிக்குவந்த பிரதான கட்சிகளின் வேட்பாளருக்கு 1 வீதத்திற்கும் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன. கம்யூனிஸ்ட் கட்சி அச்சுறுத்தல் காரணமாகவும் தாக்குதல்கள் காரணமாகவும் தேர்தலின் முன்பதாகவே தேர்தலிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்திருந்தது. கூட்டங்களையோ பிரச்சாரங்களையோ மேற்கொள்ளவில்லை. எனினும் 1.1 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளது.

தாங்கள் ஜனநாயகம் என அழைத்துக்கொள்ளும் பாராளுமன்ற சர்வாதிகார முறையின் அடிப்படையிலான தேர்தலில் கூட அமெரிக்க ஐரோப்பிய அடியாள் ஆட்சியாளர்கள் சிறுபான்மையினர் என நிறுவப்பட்டுள்ளது.

Exit mobile version