Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உக்ரையினில் கம்யூனிஸ்டுக் கட்சியை அழிக்கும் நாவ நாசி வெறியர்கள்

உக்ரையின் கம்யூனிஸ்ட் கட்சியின் மேதின ஊர்வலம்
உக்ரையின் கம்யூனிஸ்ட் கட்சியின் மேதின ஊர்வலம்

1953 ஆம் ஆண்டு ஸ்டாலினின் மறைவிற்குப் பின்னர் சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியதிகாரம் சர்வாதிகார அமைப்பாக மாற்றமடைய ஆரம்பித்தது. அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி போன்ற நாடுகளின் தலைமையில் உலகின் முதலாவது சோசலிச அரசிற்கு எதிராகவும் மக்களாட்சிக்கு எதிராகவும் மக்கள் ஜனநாயகத்திற்கு எதிராகவும் திட்டமிட்ட யுத்தம் நடத்தப்பட்டது. உளவு நிறுவனங்கள் பெரும் பணத்தை வாரியிறைத்தன. ஊடகங்களும். எழுத்தாளர்களும் விலைக்கு வாங்கப்பட்டனர். ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட சோசலிச எழுச்சியைத் தடுப்பதற்கு சோவியத் மாதிரியைப் பயன்படுத்தி சமூக நல அரசுகள் உருவாக்கப்பட்டன.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும், பல்கலைக்கழகங்களிலும் பள்ளிகளிலும் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டன. எட்வார்ர்ட் ஸ்னோடனும், ஜூலியன் அசாஞ்சும் இன்று வெளிப்படுத்திய ஐரோப்பிய அமெரிக்க இரும்புத்திரைக்குள் மக்கள் உளவுபார்க்கப்பட்டனர்.

இவ்வாறு பெரும் பணச்செலவிலும் உயிரிழப்புக்களுக்கு மத்தியிலும் சோசலிச அரசு அழிக்கப்பட்டது. ஸ்டாலின் மறைவிற்குப் பின்னர் ரஷ்ய சர்வாதிகாரிகள் ஆட்சியைக் கையகப்படுத்தினர். உலகம் முழுவதும் போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகள் இச் சர்வாதிகாரிகளின் வழி நடத்தலில் தோன்றலாயின.இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இப் போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகள் பாசிச அரசு அதிகாரங்களுடன் கைகோர்த்துக்கொண்டன. சிறுபான்மை மக்களால் ஆளப்படும் பாராளுமன்ற சர்வாதிகார முறையை ஏற்றுக்கொண்டு சீரழிந்து போயின. உலகத்தின் ஒரு பகுதி சோவியத் ரஷ்யாவின் சமூக ஏகாதிபத்தியதினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.

ஸ்டாலினிக்குப் பின்னய சர்வாதிகார அரசு சோசலிச உற்பத்தி முறையைத் தொடர்வதற்கான மக்கள் ஜனநாயகத்தைக் கொண்டிருக்கவில்லை, முதலாளித்துவ உற்பத்திமுறையும் இருந்திருக்கவில்லை. சமூகத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் போன அந்த அரசு இறுதியில் கோர்பச்செவின் சீர்திருத்தங்கள் ஊடாக தன்னை வெளிப்படையாக முதலாளித்துவத்தினுள் நுளைத்துக்கொண்டது. லெனின் சிலைகள், நினைவுச் சின்னங்கள் போன்றன அழிக்கப்பட்டன. சோவியத் ஒன்றியத்தில் சுயநிர்ணைய உரிமை வழங்கப்பட்டிருந்த தேசிய இனங்கள் தம்மைத் தனி நாடாகப் பிரகடனப்படுத்திக்கொண்டன.

இன்று நிறவாத நவ நாசிப் படைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள உக்ரையின் போன்ற நாடுகளில் லெனின் சிலைகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் உடைக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டன. உக்ரையினின் இதுவரை கால தன்னுரிமையைப் பாதுகாப்பதிலும் வளர்ச்சியை ஏற்படுத்துவதிலும் லெனினின் திட்டங்கள் பெரும் பங்குவகிதததால் ரஷ்யாவில் லெனினின் நினைவுச் சின்னங்களை அழித்தது போன்று உக்ரையினில் அழிக்க முடியவில்லை.

அமெரிக்க, ஐரோப்பிய அரசுகளின் ஆதரவுடன் சதிப் புரட்சியினூடாக உக்ரையினின் ஆட்சியைக் கையகப்படுத்திய நிறவெறி நாசிக் கட்சிகள் இன்று லெனின் சிலைகளை உடைத்துச் சரிக்கின்றன. கீவ் இலுள்ள கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையகத்தைக் கைப்பற்றியுள்ளன.

அவற்றை ஹிட்லரை ஆதரிக்கும் நாசிக் கட்சி தனது அலுவலகமாக மாற்றியுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பலர் கைதுசெய்யப்பட்டும் கொல்லப்பட்டுமுள்ளனர். பலர் தலைமறைவாகியுள்ளனர். யூதர்களையும் கம்யூனிஸ்ட்க்களையும் அழிப்பத ஹிட்லர் தனது நோக்கமாகக் கொண்டிருந்தது போலவே உக்ரையினில் அமெரிக்க ஐரோப்பிய ஆதரவு நாசிக் கட்சிகளும், வெள்ளை நிறம் அல்லாதோரையும், யூதர்களையும், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்ததவர்களையும் அழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

உக்ரையின் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சியைத் தனது வழிமுறையாகக் கொண்டிராத போதும் கூட கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியைக் கண்டாலே நாசிகள் அச்சம் கொள்கின்றனர். மேய்டன் சதுக்கத்திலுள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை நாசிகள் தீமூட்டி எரித்துள்ளனர். யூதர்கள் மீதும் கம்யூனிஸ்டுக்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களை மேற்கின் பல்தேசிய ஊடகங்கள் உக்ரேனியர்களுக்கும் ரஷ்யர்களுக்கும் எதிரான மோதல் என பொய்ச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

Exit mobile version