எது எவ்வாறாயினும், ரஷ்ய சார்பு ஊழல் அரசிற்கும், பாசிஸ்ட் கூட்டமைப்பிற்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டு யுத்ததில் தோற்றுப்போயிருப்பது உக்ரெயின் ஜனநாயகமும் தொழிலாளர்களும்.
இதுவரை உக்ரெயினில் போராட்டம் நடத்திய அமைப்புக்களில் ஹிட்லரை ஏற்றுக்கொள்ளும் நவ நாஸி பயங்கரவாதிகள் முக்கியமானவர்கள். ஐரோப்பாவில் வெளி நாட்டுக் குடியேற்றவாசிகளுக்கு எதிராகவும், வெள்ளை நிறமல்லாதோருக்கு எதிராகாவும் வெறித் தனமாக முழக்கங்களை முன்வைத்தவர்கள். இதனுடன் கூடவே கம்யூனிசத்திற்கு எதிராகவும், மக்களின் ஜனநாயகத்திற்கு எதிராகவும் வெறித்தனமாகப் போராடினார்கள்.
ஏனைய இன மக்களின் மீது வெறுப்புணர்வையும் வன்முறையையும் உமிழ்ந்த இவர்கள், தாம் ஐரோப்பியர்களாகவிருக்கும் போது ஐரோப்பாவை முஸ்லீம்களும், கறுப்பினத்தவரும் ஏனைய நாட்டுக்காரர்களும் ஆக்கிரமித்துள்ளார்கள் என்று முழங்கினார்கள். இவர்களையே ஐரோப்பிய அமெரிக்க அரசுகள் ஜனநாயகத்திற்காகப் போராடியவர்கள் என்றார்கள். ஹிட்லர் ஆண்ட ஜெர்மனி உக்ரேயின் நாஸிகளுக்கு உதவியது.
இன்று உலக ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களில் ஒருவரும் பாட்டாளிவர்க்கப் புரட்சியை வெற்றிகரமாக நடத்தியவருமான தோழர் லெனினின் சிலையை உடைத்த நாஸிகள் அதன் அருகே ஹிட்லரின் நாஸி சின்னத்தைப் பொறித்தனர்.