Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈ.பி.டி.பி யின் படுகொலை செய்யும் உக்தி 

எவரையேனும் ஈ.பி.டி.பியினர் படுகொலை செய்ய தீர்மானித்து விட்டால் முதலில் இராணுவத்துக்கு அறிவித்தல் கொடுப்பார்கள். பொதுவாக யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு வீதியிலும் சிப்பாய்களின் நடமாட்டம் இருக்கின்றது.
அத்துடன் வீதிகளின் ஓரங்களில் முகாம்கள் காணப்படுகின்றன.
ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருக்கின்ற சிப்பாய்கள் படுகொலை இடம்பெற இருக்கின்ற பகுதியிலும், அண்டிய இடங்களிலும் இருந்து ஒரே நேரத்தில் 05 முதல் 10 நிமிடங்களுக்கு இடைவேளை எடுத்துக் கொள்வார்கள்.
அப்போது முகமூடி அணிந்த ஆயுதாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்து படுகொலையை நடத்துவார்கள்.
படுகொலையைத் தொடர்ந்து சிப்பாய்கள் இடைவேளையை முடித்துக் கொண்டு ரோந்துக்கு திரும்புவார்கள்.பொலிஸ் விசாரணைகள் இடம்பெறும். கொலையாளிகள் வழமை போல பெரும்பாலும் கைது செய்யப்பட மாட்டார்கள்.- யாழ்ப்பாணத்தின் உயர் சிவில் அதிகாரி ஒருவர்தான் இத்தகவல்களை தூதரக அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறி இருக்கின்றார்.
விக்கிலீக்சின் கேபிள் ஒன்றிலிருந்து பெறப்பட்ட இத்தகவலை தமிழ் செய்தி இணையங்கள் பதிவு செய்துள்ளன.

Exit mobile version