Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈ.பி.டி.பி கோவை நந்தனின் நூல் வெளியீடு : பாரிசில் கூடிய பாசிச அரசின் முகவர்கள்

kovai nanthan  epdpஈ.பி.டி.பி உறுப்பினர் கோவை நந்தனின் கழுகு நிழல் என்ற நூல் வெளியீட்டு விழா பிரான்சின்ல் நடைபெற்றது. குகநாதனின் டான் தொலைக்காட்சியின் முக்கிய உறுப்பினரும், டக்ளஸ் தேவாந்ததாவின் ஈ.பி.டி.பி இன் பிரதான உறுப்பினருமான கோவை நந்தனின் கழுகு நிழல் வெளியீட்டு விழாவிற்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் இலங்கை அரச சார்பு டான் தொலைகாட்சியின் உரிமையாளர் தலைமை தாங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. குகநாதன் சமூகமளிக்காமையால் சோபா சக்தி நிகழ்வைத் தலைமைதாங்க, வெளியீட்டகத்தின் உரிமையாளர் சுகன், பிள்ளையானின் ஆலோசகர் எம்.ஆர்.ஸ்டாலின் அல்லது ஞானம், பத்மநாபா அணியின் சோலையூரான், சம உரிமை இயக்கம், மற்றும் புதிய ஜனநாயக  முன்னணி போன்றவற்றைச் சேர்த்த பி.ரயாகரன்,தலித் மேம்பாட்டு முன்னணியைச் சேர்ந்த தேவதாஸ் ஆகியோர் முக்கிய உரையாற்றினர்.

இலங்கையில் வன்னிப் படுகொலைகள் நடைபெற்றது குறித்த கேள்வியொன்றிற்குப் பதிலளித்த கோவை நந்தன், மழை பொழிந்தால் தூவானம் தவிர்க்கமுடியாதது என்று பதிலளித்திருக்கிறார்.
நிகழ்வில் நூறுபேர்வரை கலந்துகொண்டிருக்கிறார்கள்.

‘இன்றைய நவீன உலகின், தனியார் மயம்,தாராள மயம், உலகமயமாதல் போன்ற ஏகாதிபத்தியச் சுரண்டல்களுக்கெதிரான சரியான பார்வை உள்ள கோவை நந்தனின் கழுகு நிழல் என்னும் நூல் வெளியீடு கடந்த 26ம்திகதி ஞாயிற்றுக்கிழமை பாரிஸ் நகரில் சிறப்பாக இடமபெற்றது.’ என்று இவர்களை ஆதரிக்கும் இணையத் தளம் கருத்து வெளியிட்டிருந்தது.

இலங்கை அரசின் தொங்கு தசைகளான இவர்கள் ஏகாதிபத்தியங்களைக் கடிந்துகொள்வதை பொழுதுபோக்ககக் கொண்டிருக்கிறார்கள். சுய நிர்ணய உரிமை கேட்டால் இனவாதம் என்று கூறுவதைத் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். தமக்கிடையேயான முரண்பாடுகளை களைந்து ஒரு பொதுத் தளத்தில் ஒன்றிணையும் இவர்களின் அரசியல் இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகள் வரை மக்கள் விரோத அரசியலை இன்றைய ஜனநாயகம் என முன்வைக்கிறது.

Exit mobile version