Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈ.பி.டி.பி அலுவலகங்கள், உறுப்பினர் வீடுகள் பொலிசாரால் சுற்றிவளைக்கப்ப்படு சோதனை

இலங்கை அரசுக்கும் அரச துணைக்கட்சிகளில் ஒன்றான ஈ.பி.டி.பி இற்கும் இடையேயான உள்முரண்பாடுகள் அதிகரித்துவருகின்றன.
முன்னை நாள் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பலர் இலங்கை பாசிச அரசுடன் இணைந்து செயற்படுவதாலும், சிறீ ரெலோ போன்ற சிறிய கிரிமினல் குழுக்கள் அரச படைகளுடன் இணைந்து செயற்படுவதாலும் ஈ.பி.டி.பி போன்ற நீண்டகால வரலாற்றைக் கொண்ட கட்சிகளின் தேவை இலங்கை அரசிற்கு அற்றுப்போயுள்ளது.
இந்த நிலையில் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் யாழ்ப்பாணப் பொலிசாரால் முற்றுகையிடப்பட்டன. நெடுந்தீவில் இருந்த ஈ.பி.டி.பி. கட்சி அலுவலகங்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களது வீடுகளில் சட்டவிரோத ஆயுதங்கள் உள்ளனவா என அறியும் நோக்குடன், விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருவதாக யாழ்.உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.நிமால் பெரேரா தெரிவித்தார்.
அரசின் அழுத்தங்கள் அதிகரிக்க அக்கட்சியின் தலைவர் அடிபணிந்து செல்வதும் கட்சிக்குள்ளிருக்கும் அரச எதிர்ப்பாளர்கள் பலியாக்கப்படுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும் நிலையே காணப்படுகிறது.

Exit mobile version