Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈ.பி.ஆர்.எல்.எப், புளட் ஆகியவற்றுடன் இணையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

முள்ளி வாய்க்கால் அழிவுகள் வரை இலங்கை அரச சார்பு நிலையைக் கொண்டிருந்த கட்சிகளான புளட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியவற்றுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது. புலிகள் சார்புக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை இக் கட்சிகளைத் துரோகக் குழுக்கள் எனக் குறிப்பிடுவந்தமை சுட்டிக்காட்டத் தக்கது.

ஏழு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையின் கீழ் ஏழு கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன.

இது தொடர்பான இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 19ம் திகதி நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புளொட், ஈ.பீ.ஆர்.எல்.எப்., தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன.

Exit mobile version