Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈழ அகதிப் பெண்ணை பாலியல் வன்முறை செய்த தமிழக போலிசார்.

கரூர் அருகே உள்ள அகதி முகாமில் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 2007-ஆம் ஆண்டு நடந்த

தீபிகா,ராம்பிரகாஷ் என்ற இரண்டு சிறுவர்கள் தொடர்பான கொலை வழக்கில் இலங்கை அகதி முகாமைச் சார்ந்த குமார், பாண்டி உள்ளிட்ட மூவரைக் கைது செய்தனர். இந்நிலையில் கடந்த 7-ஆம் தியதி அதிரடியாக குமாரின் வீட்டிற்குள் நுழைந்த தமிழக போலீசார் குமாரின் மனைவி பதமாதேவியை பலவந்தப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அன்றிரவு அவரைக் கொண்டு வந்து வீட்டில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர். வீட்டில் கொண்டு வந்து விடப்பட்ட சில மணி நேரங்களில் பதமாவதி தனது உடலில் மண்ணெண்ணையை விட்டு தீவைத்துக் கொண்டுள்ளார். இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பதமாவதியை அழைத்துச் சென்ற கரூர் காவலர்கள் மூவரும் அவரை ஒருவர் மாறி ஒருவராக பாலியல் வன்முறை செய்துள்ளதோடு கடும் மிரட்டலையும் அச்சுறுத்தலையும் செய்துள்ளனர். இது குறித்து பல் வேறு மனித உரிமை அமைப்புகள் விசனம் வெளியிட்டுள்ள போதிலும் முதல்வர் கருணாநிதி இது குறித்து மௌனம் காக்கிறார் என்பதோடு வரவிருக்கும் 13-ஆம் தியதி சனிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் புதிய தலைமைச் செயலகம் திறப்பு விழா நடைபெறுவதை ஒட்டு இலங்கை அகதிகள் தங்கியிருக்கும் அகதி முகாம்களை விட்டு வெளியேற தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது. தீபிகா,ராம்பிரகாஷ் என்ற இரண்டு சிறுவர்கள் தொடர்பான கொலை வழக்கில் இலங்கை அகதி முகாமைச் சார்ந்த குமார், பாண்டி உள்ளிட்ட மூவரைக் கைது செய்தனர். இந்நிலையில் கடந்த 7-ஆம் தியதி அதிரடியாக குமாரின் வீட்டிற்குள் நுழைந்த தமிழக போலீசார் குமாரின் மனைவி பதமாதேவியை பலவந்தப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அன்றிரவு அவரைக் கொண்டு வந்து வீட்டில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர். வீட்டில் கொண்டு வந்து விடப்பட்ட சில மணி நேரங்களில் பதமாவதி தனது உடலில் மண்ணெண்ணையை விட்டு தீவைத்துக் கொண்டுள்ளார். இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பதமாவதியை அழைத்துச் சென்ற கரூர் காவலர்கள் மூவரும் அவரை ஒருவர் மாறி ஒருவராக பாலியல் வன்முறை செய்துள்ளதோடு கடும் மிரட்டலையும் அச்சுறுத்தலையும் செய்துள்ளனர். இது குறித்து பல் வேறு மனித உரிமை அமைப்புகள் விசனம் வெளியிட்டுள்ள போதிலும் முதல்வர் கருணாநிதி இது குறித்து மௌனம் காக்கிறார் என்பதோடு வரவிருக்கும் 13-ஆம் தியதி சனிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் புதிய தலைமைச் செயலகம் திறப்பு விழா நடைபெறுவதை ஒட்டு இலங்கை அகதிகள் தங்கியிருக்கும் அகதி முகாம்களை விட்டு வெளியேற தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version