SAS தொடர்பை பிரித்தனியா இரகசியமாகப் பேணவேண்டும் என்று கோரியதன் அடிப்படையில் ரோ உறுப்பினர்கள் இத்தொடர்பை இரகசியமாகப் பேணுவதற்கு அமர்த்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இலங்கையில் தமிழ்ப் போராளிக் குழுக்களான LTTE, TELO, EROS, EPRLF போன்றன 1983 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இந்திய இராணுவப் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டன. பயிற்சி பெற்றவர்களின் நேரடிச் சாட்சிகளின் அடிப்படையில் ரோ அமைப்பைச் சார்ந்தவர்களே பயிற்சியை வழங்கினர். இராணுவத்தின் செயற்பாடுகளிலிருந்து இரகசியத்தைப் பேணுவதற்காகவே ஒரு சில உளவுத்துறையைச் சார்ந்தவர்கள் ஊடாகப் பயிற்சிகள் வழங்கப்பட்டன என்பது அவதானிக்கத்தக்கது.
இந்திய உளவுத்துறையால் 80 களின் இறுதியிலேயே சீர்குலைக்கப்பட்ட போராட்டம் முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான மக்களை அழிப்பதில் முடிந்து போனது.