ஈழப் போராட்டம் வெற்றி பெற்றிருக்க முடியும் : நேபாள மாவோயிஸ்டுகள்
இனியொரு...
தாம் எண்பது வீதமான எல்லைப் பரப்புகளைக் கைப்பற்ற பத்து வருடங்கள் மட்டுமே சென்றது என்றும், மக்கள் போராடத்தினாலேயே இது சாத்தியமானது என்றும் நேபாள மாவோயிஸ்டுகள் தெரிவித்தனர். கட்மண்டூர் பரிஸ் டன்டாவில் இனியொரு மற்றும் புதிய திசைகள் சார்பில் நிகழ்ந்த உரையாடலில் மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர்களான ராம் கார்க்கி, பசுந்தா ஆகியோர் கலந்துகொண்டனர். பஞ்சாயத் அமைப்புமுறை நிலவிய காலத்தில், இந்திய ஆதரவு ரோயல் நேபாளி இராணுவம் கொடுரமான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது. இதற்கு எதிரான போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது போல ஈழப் போராட்டமும் மக்கள் போராட்டமாக ஒடுக்கப்பட்ட மக்கள் தலைமையில் நடத்தப்பட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என இவர்கள் தெரிவித்தனர். கட்சியில் பேச்சாளரும் மத்திய குழு உறுப்பினருமான தினநாத் சர்மா, வெளிவிகாரப் பொறுப்பாளர் மொகாரா, பசுந்தா, ராம் கார்க்கி, சமிர் ஆகியோருடன் ஈழம் குறித்து நடத்திய பேச்சுக்கள் இனியொருவில் வெளிவரும்.