வியட்னாமிய மக்களின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தைத் தலைமை தாங்கியவரும் பிரான்ஸ் மற்றும் அமரிக்கா ஆகிய நாடுகள் வியட்னாமை ஆக்கிரமித்த காலப்பகுதியில் மக்கள் யுத்ததின் இராணுவப் பிரிவைத் தலைமை தாங்கியவருமாவார்.
கடந்த வெள்ளி 04.09.2013 அன்று தனது 102 வயதில் காலமானார்.
வரலாற்று ஆசிரியரான ஜியாப் உலகத்தை ஆக்கிரமித்த ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான மக்கள் போராட்டத்தைத் தலைமை தாங்கி வெற்றி கண்டவர்.
வியட்னாமிய தொழிலாளர் கட்சி, 1976 ஆம் ஆண்டில் வியட்னாமியக் கம்யூனிஸ்ட் கட்சியாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தக் கட்சிகளின் நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினராக ஜியாப் திகழ்ந்தார்.
வியட்னாமியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான தோழர் கோ ஷி மிங் கல்விகற்ற அதே பாடசாலையில் கற்ற ஜியாப் ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்த காரணத்தால் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்படுகிறார். 1924 ஆம் ஆண்டு தனது கிராமத்தில் வியட் புரட்சிகர அமைப்பு என்ற இயக்கத்தின் தலைமறைவுப் பிரிவில் இணைந்த கோ ஷீ மிங், அங்கு கம்யூனிசக் கருத்துக்களுக்கு அறிமுகமாகிறார்.
1930 ஆம் ஆண்டு ஆர்பாட்டம் ஒன்றில் பங்குகெடுத்த காரணத்தால் கைதாகி ஆதாரங்கள் இன்மையால் 13 மாதங்களின் பின்னர் விடுதலை செய்யபடுகின்றார்.
எப்படி நாங்கள் போராட்டத்தை வெற்றி கொண்டோம் என்ற ஜியாப் இன் நூல் தமிழில் மொழ் பெயர்க்கப்பட்டிருந்தது. 1980 களின் ஆரம்பத்தில் அனைத்துப் போராளிகளதும் கைகளில் இந்த நூலைக் காணக்கூடியதாக்விருந்தது. இந்திய உளத்துறையும் மேற்கு உளவு அமைப்புக்களும் ஈழப் போராட்டத்தில் உள் நுளைந்து ஆக்கிரமிப்ப்தற்கு முன்பதாக மார்க்சிய லெனிய தத்துவங்களால் விடுதலை இயக்கப் போராளிகள் ஈர்க்கப்பட்டிருந்தனர். பல மேட்டுக்குடிப் அரசியல் வாதிகளை அமரிக்க உளவாளிகள் என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு இயக்க வேறுபாடுகளைக் கடந்து அனைவர் மத்தியிலும் காணப்பட்டது.
அப்பொழுது ஜியாப் ஈழப் போராளிகளுக்கு அறிமுகமாகியிருந்தார்.
ஜியாப்பின் கருத்துக்களுக்கு 80 களின் இறுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டது.
விடுதலை இயக்கங்களில் கம்யூனிசக் கருத்துக்களை அழிப்பது இந்திய உளவுத் துறையின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகவிருந்தது. பின்னர் மோதல்கள், 1983 ஆம் ஆண்டு இந்திய இராணுவப் பயிற்சியில் ஆரம்பித்து புரட்சிகரச் சிந்தனைகள் அழிக்கப்பட்டு இறுதியில் ஈழ விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டது.
இன்று யாருக்கு எதிராக ஆரம்பத்தில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதோ அவர்களின் ஐந்தாம் படைகளாகச் செயற்படும் நிலைக்கு போராட்டத் தலைமைகள் தள்ளப்பட்டுள்ளன. ஒரு பகுதி இலங்கை அரசுடனும், இன்னொரு பகுதி ஏகாதிபத்திய அரசுடனும் ஒட்டிக்கொண்டு போராட்டத்தை மிக நீண்டகாலத்திற்குப் பிந்தள்ளும் உளவாளிகள் போன்று செயற்பட்டு வருகின்றனர்.
ஏகாதிபத்தியங்களின் தொடர்ச்சியான தாக்குதல்களல் கம்யூனிச நாடுகள் அழிக்கப்பட்ட போது வியட்னாமும் ஏகாதிபத்தியங்களின் அடிமை நாடாக மாற்றமடைந்துவிட்டது.
ஜியாப் இந்த நூற்றாண்டின் மதிப்பு மிக்க போராளி. அனேகமான ஏகாதிபத்திய இராட்சத இராணுவத்தைப் புறமுதுகு காட்டிஓடவைத்த தோழர் ஜியப், மக்கள் அதிகாரம் செலுத்திய கம்யூனிச சகாப்தத்தின் அண்மையில் வாழ்ந்து இறந்து போன இறுதி மனிதனாக இருக்கலாம்.
ஆய்வகம் என்ற வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்ட ஜெனரல் ஜியாப் இன் நூல் நூலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கீழ் வரும் தொடுப்பில் அதனை வாசிக்கலாம்: