இந்தியாவின் இடைவிடாத தலையீடுகளுக்கும் அமரிக்கா,ஐரோப்பா, சீனா போன்ற நாடுகளின் அச்சுறுத்தகளுக்கும் மத்தியில் ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம். மக்களை அமைப்பாக்கி வெகுஜன அமைப்புக்களை உருவாக்குதலே எமது போராட்ட வெற்றியின் அடிப்படையாக அமைந்தது. நாம் எந்த அதிகார சக்திகளோடும் சமரசம் செய்துகொள்ளவில்லை என்பதால் காட்டிக்கொடுக்கப்படவில்லை. இவ்வாறு நேபாள மாவோயிசக் கட்சியின் மத்தியகுழு சார்பான தென்னாசியப் பிராந்தியத் தொடர்பாளர் சென்னையில் இனியொருவிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். புலிகள் வெறுமனே ஒரு இராணுவக் குழுவாகத் தம்மை நிறுவிக்கொண்டதாலும் ஜனநாயகமின்மையாலுமே தோல்வியைத் தழுவ நேரிட்டது என்றும், தோல்லிவியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். சமாதானப் பேச்சுக்களின் போது தாம் ஆயுதங்களை முற்றாக ஒப்படைக்கவோ தமது இராணுவக் கூறுகளைக் கலைக்கவோ நிராகரித்து விட்டதாகத் தெரிவித்த அவர், மக்கள் சார்ந்த போராட்டம் ஒன்று இலங்கையில் உருவாகுமானால் அதற்கு முழுமையான ஆதரவைத் தமது கட்சி வழங்கத் தயார் என லக்சுமன் பந்த் மேலும் தெரிவித்தார். இவரின் முழுமையான நேர்காணல் இனியொருவில் விரைவில் வெளிவரும்.