முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் போது தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலி
உறுப்பினர் ஒருவருக்கு தலா மூவாயிரம் ரூபா என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவில் மறைந்து வாழும் சுமார் ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இவ்வாறு ஊதியம் வழங்கப்படுவதாக அரச புலானய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
திவயினவின் செய்திகள் நம்பிக்கைகுரியவை அல்ல என்றாலும், இந்திய உளவுத் துறை மீண்டும் ஈழப் அரசியலில் தீவிரமாகத் தலையிட ஆரம்பித்துள்ளமைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. 80களில் எம்.ஜீ.ஆர் ஊடாக ஈழப் போராட்ட அமைப்புக்களைக் கையாண்டு சீர்குலைத்தது போன்றே இப்போது ஜெயலலிதாவின் ஊடாக முயற்சிக்கின்றனவா என்ற சந்தேகங்களும் பரவலாக முன்வைக்கப்படுகின்றன.