அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. மன்றத்தில் ஈழத்தமிழர் பிரச்சனை குறித்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கோரிக்கை மனுவினையும், சென்னையில் நடைபெற்ற ‘டெசோ’ மாநாட்டின் தீர்மானங்களையும், ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் வழங்கப்பட உள்ள மனுவினையும், கருணாநிதி சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் அமெரிக்க நேரப்படி பகல் 11.15 மணியளவில் ஐ.நா. மன்றத்தின் துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசனிடம் வழங்கினர்.
கருணாநிதி ஜெயலலிதா போன்றவர்கள் காலத்திற்குக் காலம் ஈழத் தமிழர்கள் குறித்துப் பேசுவதும் பின்னதாக இனப்படுகொலைக்கும் இனச் சுத்திகரிப்பிற்கும் ஆதரவளிப்பதும் ஈழத் தமிழர்களுக்கு இவர்களை இனம்காட்டியுள்ளது. ஐ.நா அல்ல செவ்வாய்க் கிரகத்திற்குச் சென்றாலும் இவர்களால் இழந்த நம்பிக்கையை மீளப்பெற முடியாது.