கருணாநிதியின் குடும்ப அரசியலில் அடுத்த முதல்வராக நியமிக்கப்பட்டிருப்பவரும் மு.க.ஸ்டாலின் அமரிக்கவிலிருந்து பிரித்தானியா செல்கிறார். அங்கு வாக்குப் பொறுக்கும் கட்சிகளையும் சந்தர்ப்பவாதிகளை இணைத்து பிரித்தானிய தமிழர் பேரவை ஒழுங்கு செய்யும், அடக்குமுறையின் சின்னமான பிரித்தானியப் பாராளுமன்றம் என்ற பன்றித் தொழிவத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
இந்தக் கூட்டம் அனைத்தும் இணைந்து ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் புரட்சிகரமான பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டத்தை பன்றித் தொழுவங்களுள் புதைத்து விடுகிறார்கள்.
செய்தியாளர் மாநாட்டில் இலங்கை பிரச்னைக்கு பொது வாக்கெடுப்பே தீர்வாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். கருணாநிதி இலிருந்து ஆனந்த விகடன் வரை மக்களின் அவலத்தின் மேல் நடத்தும் ஈழ வியாபாரத்தை போராட்ட சக்திகளின் இணைவினாலும் புதிய அரசியல் தலைமைகளாலுமே முடிவிற்குக் கொண்டுவரலாம்.